Saturday, July 20, 2013

தூங்காதவன் - இன்சொம்னியா பட விமர்சனம் || INSOMNIA - Movie Reviewவணக்கம், பல மாதங்கள் கழித்து வந்திருக்கிறது இந்த விமர்சனம்.பதிவிடுதல் என்பது ஒரு உத்வேகத்துடன் வருவது அதனால்தான் இவ்வளவு தாமதம்.
மன்னிக்க :)

சில நாட்களாக வாழ்க்கையின் மீது எனக்கு பிடிப்பு அதிகமானது,சில இரவுகள் உறக்கம் சரி வர கிடைப்பதில்லை, எனக்கு பெண் குழந்தை பிறந்ததனால்தான் என்று என் சுற்றத்தார் சொல்கின்றனர், நான் ஒத்துக்கொள்வதில்லை.
 நண்பன் ஒருவன் இது இன்சொம்னியா போல் எதாவது இருக்குமோ என்றான்.

எனக்கு முதலில் தோன்றியது, இந்தப்படம் தான்.


தமிழ்நாட்டில் தூங்கா நகரம் என்று ஒன்று உண்டென்றால் அது மதுரை தான்.
இரவா பகலா என்று தெரியாமல் வீதியெங்கும் ஒளி வெள்ளம் போல் அமைந்திருப்பதால் தூங்கா நகரம் என்று பெயரெடுதிருக்கும் என்று நினைக்கிறேன். மனிதர்கள் மனம் எவ்வளவு உயர்ந்தது,திடமானது? அது நினைத்தால் மலையையும்குடைந்து பாதை அமைப்பது போல,
எந்த அமைதியான ஊரையும், தூங்கா நகரமாக்க முடியும் அல்லது சாத்தியம் உண்டல்லவா??. ஆனால் மனிதனின் இந்த ஆற்றல், இயற்கையிடம் தற்காலிகமாக தான் மட்டுமே வெல்ல முடிகிறது?. இயற்கை தனக்கென ஒரு பாதை அமைப்பது போல, சில தூங்கா நகரங்களை ஒரு வித்யாசத்திற்காக அது உருவாக்கி அழகு பார்கிறதென்று நினைக்கிறேன்.

வருடா வருடம், ஜூன், ஜூலை மாதங்களில், ஆர்டிக் மற்றும் அட்லான்டிக் வட்டத்தில் இருக்கும் சில ஊர்கள் நிலவையும் காண்பதில்லை,இருளையும் காண்பதில்லை. இரவு நேரங்களில் சூரிய வெளிச்சம் இணை பிரியா தோழன் போல நீங்காமல் சில நாட்கள் நிலைத்திருக்கும். இங்கிலாந்து இயக்குனர் க்ரிஸ்டொபெர் நொலன், அமெரிக்காவின் தூங்கா நகரமாகிய அலாஸ்காவில் இன்சொம்னியா என்னும் டிடெக்டிவ் டிராமாவை எடுத்திருக்கிறார்.

இந்த ரிமேக் படத்தில், அலாஸ்காவின் இயற்கை பேரழகை படம் பிடித்து வெருமனே காட்சிகளிடையினில் நிரப்பாமல்,நம் மனதில் ஓர் உணர்வாக வைக்கிறார். அந்த உணர்வை எளிதாக விவரிக்க வார்த்தைகள் உண்டா? இல்லயென்றால் இப்படி சொல்லலாம் அவ்வுணர்வு ஒருவனுக்கு எளிதில் கிடைக்காதது, அது விசித்திரமானதும் கூட.பல நூரு மைல்களுக்கப்பால் இருக்கும் ஒரு குளிரான ஊரில், அன்றாட வேலைகளை மறந்து, இயற்கையின் அழகில் மயங்கி வெற்றிடமாக மாறும் நம் மனம் எப்படி உணருமோ, அதை நம் மனதில் செயற்கையாக உருவாக்கி விடுகிறார் இப்படத்தின் இயக்குனர்.இன்சொம்னியாவின் இயக்குனர் திரு நொலன், அவரது படங்களின் கதைகளில் எப்பொதும் ஒரு விசேடம் உண்டு, உளவியல் சார்ந்த விசயங்கள் முக்கியமாக இருக்கும், பிடித்தம் என்றால் ரீமேக் எடுக்க சற்றும் யோசிக்காதவர். எ.டு : பிரஸ்டீஜ் மற்றும் இப்படம். குழந்தைகள் காமிக்ஸ் புகழ் பேட்மேனையும், உளவியல் ரீதியாகவே அணுகியிருப்பார். ஆலிவூட் புகழின் உச்சி செல்லும் முன்னர், இந்தப் படம் வந்தது, அதனால் பட்ஜெட்டில் பெரிய ஆடம்பரம் இருக்கவில்லை மாறாக, எப்போதும் போல திரைக்கதையின் தாக்கம் அதிகமாகவே இருந்திருக்கிறது.
ஒரு மர்டெர் சம்பவ நிமித்தமாக கைத்தேர்ந்த டிடெக்டிவ், திருவாளர் டார்மர் மற்றும் அவரது உதவியாளர் இருவரும், மூடு பனி செழிப்பாக படர்ந்திருக்கும் அலாஸ்காவின், ஒரு குக்கிராமமாகிய நைட்மியூட்டிற்கு வருகின்றனர்.
பயணம் முதலே டார்மருக்கும் அவரது உதவியாளருக்கும் எதோ மனக்கசப்பு போல, தன்னை வேண்டா வெறுப்பாக பார்ப்பது டார்மருக்கு தெரிந்து விட்டது.

முதலில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலத்தை நோட்டம் விடுகிறார், பின்னர் அங்கே கிடைக்கும் கொலைக்கான நுண்ணிய தடயங்களை துப்பு துலக்கியதில், கொலை செய்தவன் சமீபமாக நடமாடும் பகுதியை அறிகிறார், கையும் களவுமாகப் பிடிக்கத் தயாராகிறார்.
கச்சிதமாக கொலைகாரனை சுற்றி வளைத்து பிடிக்கும் நேரத்தில், சிறு சறுக்கல், சூழ்ச்சி புரிந்து கண் முன்னே தப்பி விடுகிறான், சுற்றிலும் ஒரே பனி மயம் ஆதலால், இதை விட வேறு நல்ல சந்தர்ப்பம் கிடைக்கதென்ற மன நிலையில், கொலையாளியை சுட்டுப்பிடிக்க தயாராகிறார்.அந்த பனி மறைவில்,டார்மர் கண் முன்னே ஒரு உருவம் தெரிகிறது,குறிவைத்து சுடுகிறார். உருவம் சாய்கிறது, அருகில் சென்று பார்க்கிறார் வியர்த்துப்போகிறார், சுடப்பட்டது கொலையாளி அல்ல தனது உதவியாளன் என்று தெரியவந்ததும் அதிர்ச்சியாகிறார்.

சாகக்கிடக்கும் உதவியாளனுக்கு முதல் உதவி செய்ய எத்தனிக்கும் டொர்மெர்,தான் தவறாக சுட்டு விட்டதென மன்னிப்பு கோருகிறார், ஆனால்
உதவியாளனோ தன் முகத்தில் வெறுப்பு காட்டி செத்துப்போகிறான்.பிறகு சக அதிகாரிகள் விசாரித்தபோது தான் சுடவேயில்லை, கொலையாளிதான் சுட்டான் என்று பொய் கூறுகிறார், செய்யவேண்டிய கடைசி காரியங்களை செய்து முடித்து, உறவினர்களுக்கு தகவல் சொல்லியனுப்பிய பின்,
நிரந்தரமான பிரிவு சோகத்தில் தான் தங்கி இருக்கும்  லாட்ஜ் செல்கிறார் டார்மெர்,அன்றிரவு தூக்கம் வரவில்லை அவருக்கு மறு நாள்,அந்த கொலைகார சண்டாளன் அவருக்கு போன் கால் போடுகிறான்.

தப்பி ஓடவேண்டிய கொலைகாரனே நம்மை தொடர்புகொள்ள நினைக்கிறானே என்று டார்மர் அதிர்ச்சியானாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், அவனிடம் பேச்சு கொடுக்கிறார்..
கொலை காரனுக்கு போலீசு பற்றிய பயம் சிறிதும் எட்டி கூட பார்க்கவில்லை என்பது அவனது பேச்சில் தெரிந்தது.. ஒரு கொலை செய்த பின்பு நடக்கும் மிகப்பெரிய மனப்போராட்டம் அசாதாரணமானது தானே என்று டார்மரை மிக சாதாரணமாக கேள்வி கேட்கிறான், மேலும் "யாருக்கும் தெரியாமல் திறம் பட செய்த உங்களுக்கு தெரியுமே அதன் வலி" என்று டார்மரை மடக்குகிறான்.
உரையாடலை பாதியிலேயே துண்டிக்கிறார் டார்மர்.. உண்மை இவனுக்கு எப்படி தெரிந்தது என்று குழம்புகிறார்..

இவர் கழுத்தில் அவன் கத்தி
அவன் கழுத்தில் இவர் கத்தி

இவர்களின் பரஸ்பர எதிராளிகளின் தவறுகளை காட்டிக்கொடுப்பதா,
அல்லது விட்டுவிடுவதா என்ற முடிச்சுகளின் அவிழ்ப்பும், இவர்களுக்கிடையில் நடக்கும் சதுரங்க ஆட்டமுமும்தான், இந்த இன்சொம்னியா....

கதாபாத்திரங்களும் சம்பவங்களும் மட்டுமே இந்த திரைப்படத்தின் பலமாக இருக்க முடியாது, 24 மணி நேரமும் சூரிய வெளிச்சம் படர்ந்திருக்கும் அலாஸ்காவில் உள்ள ஒரு சிறு ஊரின் மர்ம அமைதியையும் ஆடியன்ஸ் மனதில் புகுத்தி வெற்றிக்கண்டிருக்கிறார் இயக்குனர்.
சம்பவம் நடக்கும் ஊரையும், டார்மரையும் இணைத்து உவமை காண்கிறார்,
இருவருக்கும் இருளின் அமைதி கிடைக்காமல் விழித்தே தவிக்கின்றனர்.


சில சமயங்களில், நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்கின்ற தவறுகள், நமக்கு குற்ற உணர்ச்சி தருவதோடு மட்டுமில்லாமல்,
கண் முன்னே மின்னல் போல காட்சி கொடுக்கும். அது போல டார்மர், இதற்கு முன்பு கையாண்ட ஒரு கேசில் கொலைகாரன் யார் என்று தெரிந்தும் சாட்சி கிடைக்காமல், ஜோடனை செய்ததால், அந்த தகிடு தத்தம் நினைவுகள் ஒரு முள் குத்துவது போல் அமைந்திருக்கும் டார்மரின் எண்ணவோட்டத்தை, படத்தின் எடிட்டர் சிறப்பாக கையாண்டுருக்கிறார் , சாரி எடிட்டர் பெயர் நினைவில்லை.


குற்ற உணர்ச்சியில் பல நாட்கள் உறங்காத டார்மர், இறுதிக்காட்சியில் எதிர்பாராத விதமாக குண்டடிப்படுகிறார். சாகக்கிடக்கும் இறுதி நேரத்தில், தனது குழுவில் இருக்கும் ஒரு பெண் போலீசு "எனக்கு எல்லா உண்மையும் தெரிந்துவிட்டது  டார்மர்,ஆனால் நான் அதை யாரிடமும் சொல்ல போவதில்லை" என்று கூறுகிறாள்.
அதற்கு டார்மர்,
"எதுவாக இருப்பினும், உன் உள் மனம் என்ன சொல்கிறதோ அதன் படி செய், மாறாக எதாவது செய்தால், அது உன்னை தூங்க விடாது, சரி இப்போதைக்கு என்னை தூங்க விடேன்" என்று கூறி தூங்காமல் இறக்கும் தருணத்தில், நமக்கு இன்சொம்னியாவின் வீரியத்தை வெளிக்கொணருகிறார் இயக்குனர்.

டார்மர் கேரக்டரில் டான் புகழ் அல்பசினொவும்
கொலையாளி கேரக்டரில் சிரிப்பு வள்ளல் பிளப்பர் பட புகழ் ராபின் வில்லியம்ஸும் வாழ்ந்திருப்பர்.

கொலையாளியைக்கண்டுபிடிக்க, தனது அனுபவத்தின் பலம் கொண்டு துப்பறியும் காட்சி நன்று.
அலாஸ்காவின் ஓங்கு தாங்கான இயற்கை எழிலை படம்பிடித்திருப்பதும் நன்று.படத்தின் திரைக்கதை மிக்க நன்று..

நான் நயா பைசா செலவில்லாமல் அலாஸ்கா சென்று வந்துள்ளேன், அப்போ நீங்க ??

:)

Tuesday, November 27, 2012

வந்துவிட்டார் !?வணக்கம், பாத்து ரொம்ப நாளாச்சு இல்ல..? என்ன பண்றது பர்சனல் வேலைகளுக்கு கொஞ்சம்.... இல்லல்ல  ரொம்ப நேரம் ஒதுக்க வேண்டியதா போச்சு..
இதோ இந்த தடவ ஒரு சயின்ஸ் பிக்சன் படத்த நான் பரிந்துரைக்கப்போறேன். படிச்சு முடிச்சதுக்கப்றம் படத்த அவசியம் பாருங்க மறக்காம படம் எப்டி இந்த விமர்சனம் எப்டின்னு feedback குடுங்க.

“நான் பாத்ததிலே ஒரு பெஸ்ட்டு சயின்ஸ் பிக்சன் படம் இதுதானப்பா..பேரு A Man from Earth (ஏ மேன் ஃப்ரம் எர்த்) - பூமியிலிருந்து ஒரு மனிதன்” என் அண்ணன் சொன்னதும் அது என்ன அப்டியேப்பட்ட படமுன்னு நானும் பாக்குறேனே சம்மணம் போட்டேங்க..எப்டி ஒண்ணற மணி நேரம் போச்சுன்னே சத்தியமா தெர்லங்க?

அமெரிக்கர்கள் Jerome Bixby எழுதி Richard Schenkman இயக்கின இந்த சயின்ஸ் பிக்சன் படத்துல... பேர் போட்டதுலேர்ந்து இசுக்கு விசுக்குன்னு ஒரு ஆக்‌ஷன் ஒண்ணுமே கெடயாது, கிராபிக்ஸ் கெடயாது, செட்டு கெடயாது, கொல-கொள்ள இல்ல, அட சொட்டு ரத்தம் கூட கண்ணுக்கு அகப்படலங்க..


ஒரு தனி வீடு, நம்ம ப்ரொபஸர் ஹீரோவுக்கு பிரியாவிடை குடுக்க வர்றாங்க 5 பல்கலை பேராசிரியர்கள் மற்றும் 2 பல்கலை மாணவியர்கள்.வேலயிலேர்ந்து ராஜினாமா பண்ணிட்டு வீட்ல இருக்குற தட்டுமுட்டு சாமானெல்லாத்தையும் ஜீப்ல மூட்டகட்டி ஊரவிட்டு போற நம்ம ஹெரொவ வழியனுப்புறதுதானுங்க முழு கதையுமே !

படத்துக்குள்ள போறத்துக்கு முந்தி, படத்தோட ரிலீச கண்டிப்பா நோட் பண்ணணுமுங்க. நம்ம ஊர்ல திருட்டு விசிடி,தியேட்டர் ப்ரிண்டால 3 கோடி நஷ்டம் குஷ்டம்லாம் சொல்றாங்கல்ல அத எல்லாத்தையும் புஸ்ஸாக்கிடும் இந்த படத்தோட ரிலீசு..
எதோ ஒரு புண்ணியவான், ப்ரொடியூசருக்கு தெரியாமலே படத்த தியேட்டர்ல ஷோ போட்றதுக்கு முந்தியே, (PirateBay.com) பைரைட்பே.காம்-ல torrent ஃபைலா போட்டுட்டான். அந்த புண்ணியவான விட , இத டவுன்லோடு பண்ணி பார்த்த மக்கள் அதே பாழாப்போன சைட்ல படம் ஆஹா ஒஹான்னு புகழப்போய்...தியேட்டர காட்டிலும் செம ரெஸ்பான்சு.
அதனால அடுத்த படத்தையும் டைரக்டர், இதே ஃபார்மட்ல தான் ரிலீசு பண்ணப்போறாராம். என்னது திரைப்பட வினியோகஸ்தர்களா? அவங்க சீன்லயே வரகெடயாதாம்.

சரி படத்துக்கு போவோம்..

இளம்வயது சற்று தாண்டிய பேராசிரியர் ஹீரோ Mr.JOHN வயசு பார்க்க முப்பத்தி சொச்சம் இருக்கும், தடாலடியா வேலய உதறி கடாசி ராஜினாமா பண்ட்டு அவசர அவசரமா மூட்டகட்டி தனது ஜீப்ல ஏத்திட்ருக்கார். ஆள் தனியாள், கூடமாட ஒத்தாசைக்கு யாரும் கெடயாது. சரி உதவிக்கு போவோமேன்னு அவர் கூட வொர்க் பண்ணவங்க அவரு வீட்டுக்கு ஒவ்வொருவரா வந்து சேர்றாங்க.
ஆனா அவங்க வர்றதுக்கு முந்தியே எல்லாத்தையும் பேக் பண்ணி, பாதி மூட்டைபாக்ஸ தனது ஜீப்ல ஏறகட்றத அவர் சக ஆசிரியர்கள் பாத்துட்டாங்க. என்னபா இப்டி ஒரு அவசரம், வீடட காலி பண்ட?  என கேட்ட படி அவரது வீட்டுக்குள் செல்கின்றனர்.
சாய்ங்காலம் வீட்டுக்குள்ள போனவுங்க அரட்டை, சந்தேகம் கேள்வி என பேச்சு நீண்டு இருட்னதுக்கப்றம்தான் எல்லாரும் அந்த வீட்ட விட்டு வெளிய வர்றாங்க படம் முடிஞ்சி போச்சி

”பல்கலைகழகத்துல நல்ல பேர் வாங்குனவரு திடீர்னு இப்டி எல்லாத்தையும் விட்டுட்டு போறது ஏன்” இந்த ஒரு கேள்விக்கு பதில்தான் கதையே.. அதுவும் சயின்ஸு பிக்சன் வேற...கத்தி,ரத்தம், காட்டேரி,வேற்றுகிரகவாசி இதுல ஒரு மண்ணாந்தையும் கெடயாது.


படத்த பாருங்க இந்த விமர்சனத்தோட டைட்டில் புரிய வரும் ! வசனத்த கவனிக்காம ஃபைட்டு சீன வாய மூடாம பாக்குறவங்க, கொயிந்தைங்க ரெண்டு வகையராவும் இப்படத்தை தவிர்க்கவும்..ஏன்னா உங்களுக்கு புரியாது.. தீவிர கிறித்து மதத்தினரும் தவிர்க்கவும் ஏன்னா உங்களுக்கு அஜீரண கோளாறு வந்துடும்..

இந்த’The Man from earth’ படம் பாக்குரத்துக்கு முந்தி, திரைக்கதைக்கென்றே மேற்க்கோள் காட்டப்படும் படம் ‘இன்று போய் நாளை வா’... அது இனி இல்லை !

Saturday, June 16, 2012

யாரும் இருக்கும் இடத்தில் ..... (தி ஆபிஸ் ஸ்பெய்ஸ்)

நிஜமாகவே வியர்வை சிந்தி உழைக்கும் உழைப்பாளிங்கோ சில பேரு இக்கரைக்கு அக்கறை பச்சையா "அவன் யாருயா , காலர்ல அழுக்கு படியாம சும்மா ஜம்முன்னு ஏசி காத்துல, கலக்குறான்போ" ன்னு தன்னோட சாப்ட்வேர் நண்பனை பற்றி மனசுக்குள் "அறை ஏன் கடவுள்" சந்தானம் போல ஒரு டயலாக் இருக்கும். 

கை நெறைய வாங்குறான் சம்பளம் ஆனா , சும்மா ஆணி அடிச்சி குத்த வச்ச மாதிரி ஒரே எடத்துல உக்காந்து வேல செய்யும் போது ஒரு சாப்ட்வேர் engineer கண்களும் அவனது மூளையும் ஒரு முழு உடல் தாங்ககூடிய அழுத்தத்தை தாங்குகிறது. இந்தநாள் உளவியல் சார்ந்த பிரச்சனைகள் அவன் எளிதாக சந்திக்க கூடும். மன சோர்வு ஏற்படும் என டாக்டர்கள் ஒரு case study வைத்து அவர்களின் occupational hazard ஐ விளக்கிடுவர்.

ஆனால் அப்படி வேலை செய்பவனுக்கோ, எதுக்காக நமக்கு lifela ஒரு ஏற்ற தாழ்வு இல்லாம இப்படி போர் அடிக்குதுன்னு அவனுக்கே தெரியாது.

ஒரு பெரிய அடுக்கு மாடியில் , ஒவ்வொரு மாடியிலும் நூற்றுக்கணக்கான அலுமினிய குட்டி சுவர்களுக்கு (Cabin)மத்தியில் ஏசி காற்றில் பணிசெய்யும் கடை நிலை சாப்ட்வேர் engineer கள் மூவர்களின் புழுக்கத்தை சொல்லும் படம் The Office Space !

அட நம்மள பத்திய படம் போல என ஒரு பிரிவினரும் , அப்படி என்னதான் அங்க வேல செய்வாங்களோ என கேள்விகேட்கும் வேறொரு பிரிவினரும் உட்கார வைக்கும் படமாக அமைந்ததில் , ஒரு புது முயற்சி என்ற category இல் எளிதாக உட்கார்ந்து நம் கவனத்தை பெறுகிறது . அவ்வளவே. மிகவும் அரிதாக இந்த படத்தை சாதாரண செவ்வாய் நாளில் சில சேனல் கள் telecast செய்திடுவர் அமெரிக்கவில்.

ஆபீஸ் compound உள்ள வர வரைக்கும் அவன் அவனா இருப்பான், அதுகப்றம் பீட்டர் மருமகனார் ஆகிடுவார். பொண்ணுங்களா இருந்தா முகத்துக்கு போட்ரமாரி... பேச்சு , நடவடிக்கை என எல்லாத்துக்கும் அரிதார மறைப்புகள் தான். இந்த மாதிரி எந்த ஒரு டாம்பீக கெளரவம் இல்லாத , தன்னோட பேருக்கும் நடவடிக்கைக்கும் சம்பந்தம் இல்லாத, இயல்பான ஒரு நடுத்தர வயது சாப்ட்வேர் engineer தான் நம்ம ஹீரோ. பேர் Peter Gibbons , இவனுக்கு ஒரு அழகான லவ்வர் Anne ,ரெண்டு ஆபீஸ் உண்மையான தோஸ்துங்க (என்ன மொரைக்கிறீங்க? ஏன் ஆபீஸ்ல உண்மையான தோஸ்துங்க இருக்க கூடாதா? :p) பேரு Samir Nagheenanajar & Michael Bolton, அப்புறம் பக்கத்து வீட்டு தோஸ்த் Lawrence ஒரு சாதாரண பில்டிங் construction worker (ஆனால் ரொம்ப பாசமான எதார்த்தமான ஆளு) , எல்லாம் நல்ல படியான சுற்றம் இருக்கும்போது கண் த்ரிஷ்டியாக, சனியனாக அவனது இத்துப்போன immediate மேலதிகாரி Bill Lumberg மற்றும் consultant இருவர் . இவர்கள் எல்லாரையும் மீறி ஒருவர் ஸ்பெஷல் என்றால் பீட்டர் இன் colleague Milton .

இப்ப ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொர் பீலிங்க்ஸ் பாக்கலாம்.

1 பீட்டர் , ஒரு நல்ல சாப்ட்வேர் employee , நல்ல perform பண்ணுவாரு , ஆனா கொஞ்ச நாளா அவர்கிட்டேர்ந்து சரியான performance வரதில்ல, மனச்சோர்வின் பிரதிபலிப்பு.

2 பீட்டரின் ஒரு ஆபீஸ் தோஸ்த்து , Michael Bolton இவனுக்கு தன்னோட cabin பக்கதுல இருக்குற பிரிண்டர் machine கிட்ட இருக்குற கோவம் பரம்பரை பகைவன் கிட்ட காட்ற கோவத்த விட அதிகம். இவன் தன்னோட டெஸ்க்டாப் பைல பிரிண்ட் குடுக்கும்போது பிரச்சன தான். இவனோட பேர்ல இருக்குற bolton -அ கேள்விப்பட்டு ஆபீஸ் இருக்குற எல்லாரும் பிரபல மியூசிக் டைரக்டர் bolton உக்கும் நீங்களும் என்ன relation ஆ என்ன என்று கேட்டு விட்டு "அப்டிலாம் இல்லை " என்ற பதிலை காது குடுத்து கேட்காமல் போய்விடுவர். அதனால் இந்த கேள்விக்கு வெளக்கம் கொடுத்தே அவர் வாயில புண் மயம.

3 . பீட்டரின் இன்னொரு இந்திய நண்பன் Samir Nagheenanajar , இவருக்கு இருக்கும் ஒரே கவலை தன்னை அழைக்கும் போது தன் பெயரின் கடைசி வார்த்தையான தன் அப்பாவின் பெயரை எல்லோரும் கடித்து துப்புவது தான்.

4 . பீட்டரின் மேலதிகாரி, Bill .பதவிக்கும் நடவடிக்கைக்கும் சம்பந்தம் இல்லாத ஒரு cunning சிறுபுள்ள மனிதன். தனக்கு கீழ வேல செய்றவங்க எப்ப தப்பு செய்வாங்கநு காத்துகொண்டிருக்கும் ஒரு குள்ள நரி.

5 பீட்டரோட colleague பெரும் பெருங்குவியகம் கண்ணாடி அணிந்த ஒரு அப்பாவி... .Management க்கு இவர பத்தி அவ்ளோவா விஷயம் தெரியாது . இவர் பல மாசத்துக்கு முன்னர் laid off செய்யப்பட்ட (நிரந்தரமா வீட்டுக்கு அனுப்பப்பட்ட) ஊழியர் நு யாருக்கும் தெரியாது. payroll லிஸ்ட்ல இவர நீக்காம போனதுனால ஒவ்வொரு மாச முதல் தேதிலையும் இவரது salary account க்கு சம்பள பட்டுவாடா கன கச்சிதம். இந்த படத்துல செம ஸ்பெஷல், அவர என்ன வேணும்னாலும் திட்டலாம், ஆனா அவர் டேபிள்ள இருக்குற செவப்பு ஸ்டேப்ளர யாரும் தொடக்கூடாது , மீறி கடன் வாங்கி யாரவது கொடுக்கலன்னா குசுகுசு நு பொலம்பி தள்ளிடுவாரு.

6 . அப்புறம்.... பழசா இருக்குற பல ஊழியர்கள நீக்க புதுசா appoint செய்யப்பட்ட 2 consultants,FIRE பன்றத்துக்குதான் சம்பளமே , இதுல உக்காந்துலாம் யோசிச்சி employeeஅ நீக்குவாங்க ,இவங்க பெயர் வேண்டாமே.ப்ளீஸ் :P

ரைட்டு இப்ப கதைக்கு,

பீட்டர் -க்கு ஒரு அதிர்ச்சி task வருகிறது,
90s மத்தியில் தண்ணி காட்டிய படா bug Y2K வ solve பண்றதுக்கும் migration பண்ண வேண்டும். அந்த bug -அ பத்தி முன்கூட்டியே தெரிஞ்சுதுனாலையோ என்னமோ , வேலையில ஒரு concentration னே இல்ல தலைவருக்கு. எத எடுத்தாலும் கோவம் , நுழை வாயில் கைப்புடி பேஜார் , ஒரு சிறு ப்ராஜெக்ட் தப்ப சரி பன்னதுக்கப்ரமும் அறை டஜன் reporting அதிகாரிகள் வாய் பேச்சாலேயே post mortem பிரஷர் கொடுப்பதை நினைக்கும்போது காண்டு, என கூண்டில் அகப்பட்ட சிறகொடிந்த கிளியாய் பாவமாகிறார் ஹீரோ.

பிறிதொரு நாள்....,
சரி !! என்ன ஆனாலும் பரவா இல்லடா ராஜா , இன்னிக்கு ஆகட்டும் பாத்துடலாம்னு இருக்கன் என்று வீரமாக இருக்கையில் உட்காரும் நேரத்தில் வருகிறது பேராபத்து , சாரி பெரிய ஆப்பு. கொஞ்ச நாளா கம்பெனி பிசினஸ் டல்லாம், அதனால போன மாசத்துல யாரு performance கம்மியாஇருக்கோ அவங்கள ஒரே அடியா தூக்கப்போரங்கபா என தனது காபினில் இருக்கும் தோஸ்துகள் பேச்சு அடி படுகிறது. இந்த செய்தி எப்ப காதுல விழுந்துச்சோ அபோலேர்ந்து வயித்துல பசி இல்ல, நைட்ல தூக்கமில்ல நம்ம பீட்டருக்கு.

அன்னிக்கு நைட்....
தான் தூங்காம இருக்குறத அவனோட லிவிங் டுகெதர் காதலி கண்டு கொள்கிறாள் ஆனால் அவளிடம் இந்த காரணத்தை கூறவில்லை பீட்டர். அவளும் ரொம்ப மனசொடஞ்சி போகிறாள். டக்கென்று ஒரு ஐடியா வருகிறது அவளுக்கு. தன கணவனை ஒரு மனோதத்துவ டாக்டரிடம் appointment வாங்குகிறாள் . அவனும் செல்கிறான். அங்கு அவனுக்கு ஹிப்நோடிசிம் மூலம் ஒரு சிகிச்சை அளிக்கிறார் டாக்டர் , சிகிச்சை தொடங்கும் நேரத்திலேயே பீட்டருக்கு புத்துணர்ச்சி அள்ளுகிறது, சிகிச்சை பாதியிலே வைத்தியம் பார்க்கும் டாக்டருக்கு வலி ஏற்படுகிறது, அதனால் சிகிச்சையை பாதி டீலில் விடுகிறார். ஒரு வித அரைவேக்காடான மனதுடன் ஹாஸ்பிடல் ஐ விட்டு வெளிய வருகிறான். கண் முன் புது உலகம் தெரிகிறது. நாளை ஆபீஸ்ல என்ன நடக்கபோகுதோ என்ற கேள்வி எழுகிறது.

அடுத்த நாள், ஆபீசில்...
நுழை வாயில் கைப்புடி வழக்கம் போல் மக்கர் பண்ணுகிறது , வருகிற வேகத்தில் அந்த பேஜார் புடியை அனைவரின் கவனம் ஈர்க்க பிடுங்கி எறிகிறான். புத்துணர்ச்சியுடன் இருக்கும் பீட்டர் ஐ மற்ற அனைவரும் மிரட்சியுடன் காண்கின்றனர். புஜ பலசாலியாக தன்னுடைய சீட்டில் அமரும்போது வெளி உலக இயற்கை காட்சியை தன்னருகில் இருக்கும் ஜன்னல் ஸ்க்ரீன் மறைப்பதை அன்று முதன் முறையாக உணர்கிறான். பிறகு ஸ்க்ரீன் உம் பிடுங்கி எறியப்படுகிறது. கூண்டிலிருந்து வெளியே பறக்கவிடப்பட்ட கிளி போல சிறகடித்து காணப்படுகிறான்.

பின்னர் ஒருவர் பின் ஒருவராக வந்து discussion ரூமிற்கு வரச்சொல்லி circular ஒன்று அவனது தோஸ்துகள் உட்பட அனைவருக்கும் வருகிறது, தூக்கு தூக்கிகள் consultant கள் இருவரிடமிருந்து ! மற்ற colleague இருவர்கள் வெளியே காத்திருக்க ஒருவர் அறைக்குள் செல்ல என்று போகிறது நேரம். பீட்டர் ஐ விட மற்ற இருவரும் சற்று நன்றாகவே வேலையில் அக்கறை காட்டுபவர்கள் என்றாலும் , முதல் நாள் தந்த treatment இவனுக்கு பல ஜீவன்டோன் குடுத்தன பீட்டருக்கு .

பேரிடி, கொடிய மின்னலாக மாறியது, இரண்டு நண்பர்களும் உள்ளே சென்று தங்களது laid off செய்தியை இஷ்டமின்றி வாங்கி வருகின்றனர். மூன்றாவதாக சலனமே இல்லாமல் உள்ளே செல்கிறான் பீட்டர். கன்சல்டண்டுகள் இருவருமே பீட்டருக்கான எழவு செய்தியை சொல்ல தயாராகின்றனர். அதற்குள் பீட்டர் தனது ஆளுமையை நிருபிக்கும் வகையில் , தனக்கு பிடித்தமான டீ பொடியை கொஞ்சம் பாலில் கலந்து சட்டையில் இருக்கும் இரு கை களையும் உயரே ஏற்றி , ஸ்டைலாக இருக்கையில் அமருகிறான்.

கடந்த சில நாட்களாக ஆபீசில் என்ன நடக்கிறது என்று கேட்கின்றனர்,முதலில் அந்த எழவர்கள். "பெருசா சொல்லிகிரமாரி என்ன நடக்குது எல்லா தெரிஞ்ச விஷயம் தான, மேநேஜுமென்டே தகிடுதத்தம் இதுல இவன் செரியில்ல தூக்கு அவன் செரியில்ல தூக்குன்னு போயிட்டு இருக்கானுவோ . இவ்ளோ பெரிய மனித வளத்த வச்சி ஒன்னும் புடுங்குல , இதுல எல்லாத்தையும் தூக்கிட்டு அப்டி என்னதான் புடுங்கு வாங்களோ" என்கிற ரீதியில் திட்றதுக்கு செம சான்ஸ் டோய் நு எல்லாரையும் ஒரு வாங்கு வாங்குகிறான் பீட்டர். "இப்போ நீங்க என்னை என்ன செய்ய போறீங்க ? " என்ற பதில் கேள்வியை அவர்கள் சைடு பக்கம் திருப்ப ....

அவர்களோ முகத்தில் கடுகு தாளித்தது, அதை கொஞ்சமும் வெளிப்படுத்தாமல் "கொஞ்சம் வெளியே வெயிட் பண்ணுங்க , நாங்க discuss பண்ட்டு சொல்றோம்" என்று சொல்லி , கொலைவெறியை கட்டுபடுத்தினர். சிறிது நேரத்திற்கு பிறகு பீட்டர் ஐ உள்ளே அழைத்து "You actually posses the art of management , your view about the company is impressive" என்கிற வார்த்தைகளை அடுக்கிகொண்டே இறுதியில் "உங்கள ப்ரொமோட் பண்றோம் வாழ்த்துக்கள்" என்று கூறி அவனுக்கு கை கொடுக்கின்றனர். அவனும் அதிர்ச்சியில் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் கை கொடுக்கிறான் .

"ஐயோ வேல போககூடதே நு நெனைக்கிற என்னோட தோஸ்துங்களுக்கு சீட்ட கிழிச்சி , இந்த நாய் பொழப்பு வேலையே வேண்டாம்டா நு கெடக்குர என்னைய போய் ப்ரொமோட் பண்றீங்களே டா !", "இதத்தான் mba ல அதுவும் ரெண்டு வருஷம் படிசீங்களா அட எழவெடுதவனுங்களா !" என்ற கேள்வி தன மனத்தில் இருந்தாலும் , அதை வெளிக்கொணராமல் வந்தவரை ஏற்றுக்கொள்வேன் என்று பதவியை ஏற்றுக்கொள்கிறான் பீட்டர்.

அறை வெளியே இருக்கும் நண்பர்களுக்கு இரங்கல்பா பாடிவிட்டு, வீட்டுக்கு செல்கிறான் . அங்கு இவனது அபரிமிதமான மகிழ்ச்சியால் அவள் வழக்கமாக இடும் அன்பு கலந்த கட்டளை இவன் காதில் ஏனோ இப்போது விழுவதாக இல்லை . அதனால் அன்றிரவே முசுடு கோபத்துடன் , அவனை விட்டு வெளியேறுகிறாள் தற்போதய முன்னாள் லிவிங் டுகெதர் காதலி. அவனை வெறுப்பேற்றும் பழி வாங்கல் நடவடிக்கையாக அவனது பாஸை வளைத்து போட்டது என்பது வேறு கதை.

மறு நாள் காலை ......
தன்னுடைய காரை தனது மேலதிகாரிக்காக ஒதுக்கப்பட்ட ப்ரேத்யேக parking lot -ல் park பண்ணுகிறான் ஸ்மார்ட் ஸ்டார் பீட்டர்.
என்னுடைய டேபிள்ள இருந்த ஸ்டேப்ளர எடுத்தீங்கள என ஒவ்வொருவரிடமும் விசாரிக்கும் மில்டன் ஐ கடந்து அன்றைய அலுவலுக்காக காபினில் செல்கிறான் அவன் . மதியம் அருகில் இருக்கும் restaurant ல் வேலை செய்யும் Jennifer Aniston இடம் தனது அன்பையும் விருப்பத்தையும் பகிர்கின்றான், நெருக்கமாகின்றனர் இருவரும், ஆபிஸ் வேலை அன்று நல்ல படியாக செல்கிறது அவனுக்கு, தன் பக்கத்து வீடு construction work வேலை செய்யும் நண்பன் தற்போதைய மாற்றத்தை அவன் சிறு வயதில் கண்டதாக நினைவூட்டுகிறான், பீட்டர் நினைத்து பார்கிறான்.

மறுநாள் , laid off செய்யப்பட்ட நண்பர்களின் ஞாபகம் வருகிறது அவனுக்கு. வண்டி எடுத்து மூவரும் ஒரே இடத்தில் ஒன்று கூடு கின்றனர். வேலை செய்த போது நிறைவேத்த முடியாத கடமை ஒன்றை செய்ய மூவரும் ஐடியா போடுகின்றனர் ,

முதல் கட்டமாக Michael bolton க்கு தண்ணி காட்டும் பிரிண்டரை யாருக்கும் தெரியாமல் திருடி அதை சுக்குநாராக போகும் வரை தங்களது ரௌத்திரத்தை காட்டுகின்றனர் மூவரும்.
பிரிண்டர் வதம் முடிந்த பின்னர் , ஒரு spark ஐடியா தோனுகிறது ஒருவனுக்கு. கம்பெனிக்கு நடக்குற ஒவ்வொரு பண பட்டுவாடாவிலும் ரூபாயுக்கு ஒரு பைசாவாக தனது அக்கௌண்டில் transaction போகும்படி சின்னதா accounting ப்ரோக்ராம் ல ஒரு திருத்தம் பண்ணும் ஐடியா அது.பல செலவுகளை கம்பனி கண்டு கொள்வதே இல்லை என்பதால் மூவரும் implementation இல் இறங்குகின்றனர், அதையும் கனகச்சிதமாக செய்து முடித்து விடுகின்றனர். அக்கௌண்டில் பணம் இலகுவாக விழுகிறது. மகிழ்ச்சி !! அப்புறமென்ன , ஓபன் தி பாட்டில் தான்.

பிறிதொரு சமயம் ஆபீசில், அந்த ஸ்டேப்ளர் பார்ட்டியை இனம் கண்டு கொண்டு விசாரிக்கின்றது அந்த consultant ஜோடி.அவர் ஆபிஸ விட்டு டிஸ்மிஸ் பண்ணி பல வருடம் ஆவதே தெரிவு செய்கின்றனர். கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம ஓசிக்கு பெஞ்ச்ச தேய்ச்சிட்டு போகுது பாரு என்று கொதித்து போகின்றனர் அந்த consultant இருவரும். மில்டன் ஒரு அப்ராணி என்பதால் அவரிடம் விஷயத்தை லேசாக சொல்லி வீட்டு க்கு போக சொல்கின்றனர். அவர் அதை கண்டுகொள்வதாய் இல்லை , அவருக்கு அவருடைய காணாம போன ஸ்டேப்ளர் தான் முக்கியமே. இதனால் அவரது இருப்பிட chair ஐ நாளாக நாளாக கொஞ்சம் கொஞ்சமாக ஆபீஸ் ஐ விட்டு தள்ளி செல்கிறது.

பின்னர் நண்பர்கள் மூவரும் எதேச்சையாக தங்களது அக்கௌண்டில் பணம் எவ்வளவு என்று பார்கின்றனர். அது பல இலக்கங்களை கொண்டு நீள்கிறது. அதில் எதிர்பார்த்தது ஒரு நான்கு இலக்க நம்பரையே ! உடனே பீதி கவ்வுகிறது அந்த மூவரின் முகத்தில் , தாங்கள் ப்ரோக்ராமில் திருத்தம் செய்யும்போது தவறாக வேறு இடத்தில் floating பாயிண்ட் வைத்து விட்டதை கண்டு அதிர்ச்சி அடைகின்றனர். என்ன செய்வதென்று புரியவில்லை மூவருக்கும். ஒவ்வொருவரும் தம்பி அப்டியே எஸ்கேப் ஆகிடாலம்டா,அதுக்கு மாறுவேஷத்துல திரியலாம் , என பல சமயோசித ஐடியாக்கள் கிடைத்தாலும், பீட்டர் அன்று இரவு தனது restaurant காதலி இடம் கருத்து கேட்க, அவள் அவனுடைய ஆபிசுக்கு ஒரு மன்னிப்பு கடிதம் போட சொல்கிறாள்.

மறுநாள் கிளைமாக்ஸ் ..... suspense வேண்டாமென்றால் படிப்பதை நிறுத்தி விட்டு படத்தை போட்டு பாக்கவும், இல்லையென்றால் தொடரலாம்... :)


அன்று ஞாயிற்றுகிழமை, ஆபிஸ் ஹொலிடே !!

நேரில் சென்று கடிதம் கொடுக்க தைரியம் வரவில்லை பீட்டருக்கு எனினும் உள்ளுக்குள் ஒரு குற்ற உணர்ச்சி, ஆதலால் தன் உள்மனது சொல் படியே மன்னிப்பு கடிதத்தையும் சேர்த்து தனது ராஜினாமா கடிதத்தை விடுமுறையன்றே பூட்டிய கதவிடுக்கின் வழியாக உள்ளே போட்டு விட்டு செல்கிறான். அந்த நேரம் அந்த ஸ்டேப்ளர் பார்ட்டி , கொஞ்சம் கொஞ்சமாக தனது ஆபிஸ் இருக்கையை பார்கிங் லாட் அருகில் வந்துவிட்டமையை எண்ணி செம காண்டாகிறான்.. அதனால் அந்த பில்டிங் ஐ நெருப்பு கொளுத்தி தரை மட்டம் ஆக்குகின்றான். பீட்டரின் ராஜினாமா மற்றும் மன்னிப்பு கடிதம் , கம்பனியின் அனைத்து sensitive information கள் அனைத்தும் தடம் தெரியாமல் பஸ்பம் ஆகின்றன.

மூவரும் மறு நாள் ஆபிஸ் வருகின்றனர், தரைமட்டமான கட்டிடத்தை காண்கின்றனர். மூவரும் தங்களது அதிர்ஷ்டத்தை மெச்சிடுகின்றனர். மலையும் வரலை , மயிரும் போகவில்லை என்ற நிலையினால் ஒரு வித neutral பீலிங்க்ஸ் அவர்களுக்குள்.

அந்த இடிபாடுகளில், மில்டனின் காணாமல் போன ஸ்டேப்ளர் ஐ கண்டெடுக்கிறான் பீட்டர் , அதை யாரிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்று மனத்தில் நினைக்கிறான்.

சில நாட்கள் உருண்டோடுகிறது, பீட்டர் ஆபீஸ்க்கு வரவே இல்லை என்பதனால் அவனை விசாரிக்க வருகின்றனர் பீட்டர் வீட்டிற்கு வருகின்றனர் இருவரும். யாரும் கணிக்க முடியாவண்ணம் பீட்டர் அங்குள்ள ஒரு கட்டிட வேலையில் கல்லுடைக்கும் வேலை செய்கிறான். நண்பர்கள் வேலை வேலை செய்த கம்பனியின் போட்டி கம்பெனியில் புதிதாக வேலையில் சேர்ந்து விட்டதும் , தாங்கள் இருவரும் பீட்டரை வேலைக்கு refer செய்வதாகவும் கூறுகின்றனர். பீட்டர் அதை அன்பாக மறுக்கின்றான் , தனக்கு இந்த கல்லுடைக்கும் வேலை பிடித்திருக்கிறது என்றும்,

"யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்யமே " கூறி சுபம் போடுகிறான் இயல்பன் பீட்டர் .

படம் பாத்துட்டீங்களா ??


போடோவில் உள்ளவர்கள் : (இடமிருந்து வலமாக) Samir Nagheenanajar(Peters friend), Peter Gibbons (Hero), Michael Bolton (Printer Vengeance fame) and Milton (Mr.Stapler) :)

Friday, June 15, 2012

பவுலிங் பார் கொலம்பைன்

செய்தி 1 : தலைநகரம் டெல்லில, ஒரு பேர் தெரியாத இஸ்கூலு , ஏதோ சப்ப தகராறுல ஒரு ரொம்ப பணக்கார பய புள்ள இன்னொரு பணக்கார பய புள்ளைய புத்தக பைல வச்சிருந்த துப்பாக்கிய எடுத்து டிபீகோல்....... !
செய்தி 2 : நம்ம சிங்கார தலைநகரம் சென்னைல திருட்டுதனமா மாங்கா பறிக்க போன ஒரு அறியா சிறுவன, ஒரு முன்னாள் பட்டாளத்தான் சும்மா குருவிய சுட்ற மாதிரி...நிற்க ....
இந்த மாதிரி டுமீல் பனால் நியூஸ்லாம் நம்ம ஊரு ஊடகத்துல தலைப்பு செய்தி , ஆனா அமெரிக்காவுல காலங்காலமா வர்ற கடைசி பக்க பொட்டிசெய்தி.

அதனால என்னங்குரீங்களா ?? ஒண்ணுமில்ல, ஒரு அஞ்சு நிமிஷத்துக்குhttp://en.wikipedia.org/wiki/School_shootingஇந்த உரலிய கொஞ்சம் சொடுக்கி நோட்டம் உட்டுகினு வாங்க......,
உரலிய செய்திங்கோ எல்லாம் பாத்தாச்சா ?? சரி விஷயத்துக்கு வர்றதுக்கு முன்னால நீங்க "இதெல்லாம் அந்தந்த நாட்ல இருக்குற லோக்கல் பிரச்சனபா" நு சொல்லலாம்
ஆனா...... ,
இது நம்ம நாட்லயும் இப்போ வளர்ந்து வர்ற ஒரு பெரும் பிரச்சனங்கோ!!
அதுக்குத்தான் அந்த மொதல் ரெண்டு உதாரணங்கள்.

வருடம் 1999 , மிக சாதாரணமான ஒரு காலை நேரத்தில் ,அமெரிக்காவின் கொலம்பியா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் செமி ஆட்டோமாடிக் துப்பாக்கிகளை ஏந்திய இரு சிறுவர்கள் நடத்திய வெறி கொண்ட காரணமில்லா துப்பாக்கி சூட்டில் 12 சின்னஞ்சிறு குழந்தைகளும் ஒரு ஆசிரியரும் பலியாயினர், பிறகு தங்களை தாங்களே சுட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டனர். (விபர உரலி:http://en.wikipedia.org/wiki/Columbine_High_School_massacre ), இந்த எதிர்பாராத சம்பவத்தை அடுத்து தன மனத்தில் எழுந்த குழந்தைகள் - துப்பாக்கி தொடர்புடைய பல கேள்விகளுக்கு எழும் பல்வேறு solution களை அருவி போல் ஊற்றுகிறார் மைகேல் மூர் (Mr Michael Moore ) Bowling For Columbine என்கிற டாகுமெண்டரி படத்தில் .தனது குசும்பு கேள்விகளை (சில சமயம் அது logical ஆக அமைந்திடும்) படம் நெடுகில் அவ்வப்போது சொருகிவிடுவது மூரின் touch . படத்தின் திரை விரிகிறது, முதல் சீனில்
புயலுக்கு முன் அமைதி என்பது போல, துப்பாக்கிகளால் ஏற்படும் விளைவுகளை பின் வரும் காட்சிகளில் காட்டப்படுமுன் அமெரிக்காவில் தலை சிறந்த ஒரு வங்கியின் கிளை அலுவலகத்தை அணுகுகிறார், இந்த டாகுமெண்டரி கதாநாயகன் , மைகேல் மூர். எல்லா வங்கியிலும் இருப்பது போன்ற சில கண்கவர் offer -களை வாடிக்கையாளரிடம் பட்டியலிடுவது போல இவரிடமும் பட்டியலிடுகிறது அந்த கிளை நிர்வாகம். அவரும் ஒரு ஸ்பெஷல் deposit பிளானை டிக் செய்கிறார், பிறகு அனைத்து form filling சம்ப்ரதாயங்களும் முடிந்தவுடன் காத்திருக்கிறது ஒரு அதிர்ச்சி ! தனது recent வாடிக்கையாளரான மூரிடம் அவரது பிரத்யேக பேங்க் லாக்கர் சாவியுடன் மிருகங்களை வேட்டையாட பயன்படும் ஒரு மினி rifle ஐ கொடுக்கின்றனர். இது அந்த offer இல் உள்ள அனைத்து வாடிக்கையாளருக்கும் கொடுப்பது வழக்கம் என பீற்றிக்கொள்கிறது அந்த நிறுவனம்.

Massacre Reason no 1: எளிதாக கிடைக்கும் துப்பாக்கி களவாடங்கள்.

கேட்கிறார் தனது முதல் குசும்பு கேள்வியை அந்த நிர்வாகியிடம்...
" எந்த ஒரு முன்னேற்பாடு இல்லாம , இப்டி பொசுக்குன்னு துப்பாக்கிய கைல கொடுக்குறீங்களே இது எந்த அளவுக்கு உங்க பேங்க்குக்கு safety " அவர்கள் இளிக்கின்றனர்..

மைகேல் மூர் பேட்டி எடுக்கும் விதம் , தாறுமாறு
அதே போன்று சில கேள்வி காட்சிகள் பின் வருமாறு ...
1 . அந்த கொலம்பியா massacre காரணமான இருவர்களின் classmate களிடம் (வயது 14 தாண்டாது)
மூர்: "கொலை நடந்த அன்னிக்கு அவங்க(கொலையாளர்கள்) பள்ளிகூடத்துக்கு வழக்கமா வர்ற மாதிரிதான் வந்தாங்களா ??"
அவர்கள் : "யெஸ் !!"
மூர்: "அவங்க இயல்பானவுன்களா இல்ல எப்டி ??"
அவர்கள் :"அவங்க யார்கிட்டயும் பேச மாட்டனுங்க, அவனுங்களுக்குஉள்ள மட்டும் தான் பேசிப்பாங்க சிரிச்சிப்பாங்க"
மூர்: "அன்னிக்கு காலைல என்ன பண்ணங்க , I Mean , கொல பண்றதுக்கு முன்னாடி ??"
அவர்கள் : "அவங்களுக்கு Physical Education class அதனால snow bowling வேலையாட போயிருந்தாங்க"
மூர் : " Physical Education class ல bowling -கு அனுப்புறது எந்த விதத்தில் நியாயம் , எல்லாரும் கிளாஸ் அட்டென்ட் பண்ணிருப்பங்கலே? அவங்க ஏன் போல ??"
அவர்கள்: "அது எங்களுக்கு தெரியாது, ஆனா அவங்க dull students , அவங்கள யாரும் கேட்கமாட்டாங்க"

Massacre Reason no 2: சிறுவர்களின் ஆர்வமின்மையும் , ஆசிரியர்களின் கவனக்குறைவும். so Massacre Reason no 1 சரியல்ல ... ஏனென்றால் ...மைகேல் ... பின்னர், போவோர் வருவோர் என எல்லாரிடமும் இந்த கேள்வியை வைக்கிறார் மூர்.
"ஏன் நம் நாட்டில் மட்டும், துப்பாக்கி கலாச்சாரம்??"
எதிர் வரும் சில உதாரண பதில்கள்

1 . Easy Availability : எளிதாக கிடைப்பன.
உண்மையா ? : "தவறான கருத்து, அமெரிக்காவிலும் கனடாவிலும் கிடைக்கும் துப்பாக்கி பொருட்களின் availability ல் வித்யாசம் சிறிதும் கிடையாது, அப்டி இருக்க ஏன் crime ரேட் -இல் வித்த்யாசம் ?? " Massacre Reason no 1 சரியல்ல ஏனென்று புரிகிறதா ??

2 . Our Violent History
உண்மையா ? : "தவறான கருத்து, அமெரிக்கவை விட ஜெர்மனி தான் ரத்த வரலாற்றில் நாடே மிதந்தது aanal தற்போதய அமெரிக்காவில் மட்டும் ஏன் வன்முறைகள் உச்சகட்டம் ??"

3 . Violent PC and Video Games :
வடிகட்டிய பொய் !, "ஜப்பான்தான் இந்த உற்பத்தியில் முன்னோடி!!, அங்கு வன்முறை ஏற்படும் சம்பவங்கள் குறைவே "

4 . POP and R&B பாடல்களில் வரும் வன்முறை வரிகள் முக்கியமாக pop பாடகர் Marylin Manson பாடல்களில் வரும் வரிகள்.
கொலம்பியா சம்பவ கொலையாளர்கள் இவரது பாடல்களை அடிக்கடி கேட்பவர்கள் என்ற தகவலுடன்
பாடகர் marylin manson ஐ பேட்டி எடுக்கிறார் மைகேல்,
"உங்களது பாடல்கள் வன்முறையை தூண்டுகின்றனவே ?? என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில்".

பொதுவாகவே அனைத்து கலைஞர்களும் இவ்வகை குற்றங்களுக்கு உள்ளாகின்றனர், இந்த நாடு மக்கள் , நாட்டை சூறையாடியும், அடுத்த நாட்டில் உள்ள எண்ணைக்காக போர் புரியும் president உகள் , அப்புறம் மோனிக்கா லெவின்ஸ்கி அடிமை president இருக்கின்றனர், இவர்களால் ஏற்படும் பிரச்சனைகளை விட்டு விட்டு எனது பாடல் வரிகளை கேட்டு ஒருவன் கொலை செய்கிறான் என்று சொல்வது மிக அபத்தம் என்று பேட்டியை முடிக்கிறார் பாடகர், இது உண்மையா இல்ல பொய்யா என்ற முடிவு நம்மிடத்தில் .


அப்ப எதனால தான்பா இந்த வன்முர கருமாந்திரம் எல்லாம் ??
அந்த காரணங்களை ஒரு 10 நிமிட அனிமேசன் படத்துடன் விளக்குகிறது ஒரு வாயுள்ள துப்பாக்கி தோட்டா...
வரலாற்றை புரட்டும் போது, அமெரிக்கர்கள் இயல்பாகவே ஒரு வித பய உணர்வோடு வாழ்பவர்கள், அதனால் அவர்கள் மற்ற இனத்தவர்களை (செவ்விந்தியர்கள் , கறுப்பினத்தவர்கள் உட்பட)
அனைவரையும் பயத்துடன் அணுகி தங்களை வராத ஆபதிடமிருந்து தப்பித்து கொள்ள துப்பாகியை உபயோகம் செய்கின்றனர் என்று விளக்குகிறது அந்த குறும் படம். மேலும், KLU KLUX KLAN [ KKK ] க்ளு க்ளக்ஸ் க்ளான் என்ற அமைப்பு மிகவும் பின்னடைந்துள்ள கறுப்பினத்தவரை எவ்வாறு ஆட்டிபடைத்தது என்றும், பின்னர் சமத்துவ அமெரிக்காவாக மாறிய பின்பு அதே அமைப்பு National Rifle Association (NRA) என்ற மறு பெயரோடு விஸ்வரூபம் அடைந்ததும் எடுத்து காட்டப்படுகிறது. அந்த NRA அமைப்பு ஏற்படுத்திய சட்டமானது வேறொரு இனத்தவரிடம் உள்ள துப்பாக்கியை பிடுங்கி , வெள்ளயரிடத்து கொடுக்கும் கொடூர விலங்கை கட்டவிழ்த்து விடும் அதிகாரத்தை கொடுப்பதாகும்.

இதன் தொடர்ச்சியாக சமிபத்திய NRA தலைவர் திருவாளர் Charles Heston (பெரும் புகழ் பெற்ற Ben Hur படத்தின் ஹீரோ) அவர்களையும் பேட்டி எடுக்க செல்கிறார் மைகேல் மூர்.

பேட்டி எடுக்க அனுமதி கேட்கிறார் மூர், charles heston இன் வாசல் முன்பு .
தனது பிரத்யேக அறையினிளிருந்து , நுழைவு வாயில் கேட் இல் இருக்கும் ஸ்பீக்கர் வழியாக
சார்லஸ் :"யாரது ??"
மூர் : "நாந்தான் சார் , மைகேல் மூர் , உங்க சாதனைகள பேட்டி எடுக்க வந்துருக்கன், நான் உங்களது வலிமையான அமைப்பான NRA வின் கடைநிலை உறுப்பினர்".
சார்லஸ் : "செக்யூரிட்டி ! , அவர உள்ள விடுங்க!!"
guest அறையினுள் மூரை வரவேற்கிறார் சார்லஸ் .

மூர் : "உங்க படங்களுக்கும் உங்களக்கும் தீவிர ரசிகன் சார் நான் , பேட்டிய ஆரம்பிக்கலாம சார் ?"
என்று soft ஆ ஆரம்பித்த மூர் பின்னர்
"கொலம்பியா ல நடந்த அந்த துர் சம்பவதுக்கப்ரம் நீங்க இந்த சம்பவமெல்லாம் பெருசா ஒண்ணுமில்ல அதனால நாம Rifle உபயோகத்த தடுக்க கூடாதுன்னு பேரணி நடத்துனது தப்பு தான சார் ??"

அப்புறம் நீங்க பண்ண இந்த நடவடிக்கைகளால தொடர்ந்து நடந்து வரும் சிறுவர்கள் துப்பாக்கி கலாச்சாரத்தை ஊக்குவிதத்தை எண்ணி அதில் பரிதாபமாக பலியான இந்த சிறுமியின் போட்டோவும் இந்த கேமரா முன்னிலிருந்தும் ஒரு மன்னிப்பு கேளுங்க சார் என்ற முதல்வன் பட நாக்கை புடுங்கும் கேள்விகளை கணையாக அனுப்புகிறார் மூர்.

இதை சற்றும் எதிர்பாராத சார்லஸ், நம்ம முதல்வன் பட ரகுவரன் போலல்லாமல் , பேட்டியை பாதி டீலில் விட்டுவிட்டு கோபித்துக்கொண்டு நடையை கட்டுகிறார். அந்த சிறுமியின் படத்தை ஒரு தூணில் சாய்ந்த படி நிமர்த்தி வைத்து அதற்க்கு மன்னிப்பு கலந்த அஞ்சலியை சார்லஸ் சார்பாக செலுத்துகிறார் இந்த டாகுமெண்டரி நாயகன் மூர் .

படத்திரை சுருங்கி சுபம் போடுகிறது.

படம் அடுத்தடுத்த கேள்விகளை உள்ளடக்கி அதை அவ்வப்போது பதில்களையும் அளிப்பதால் படம் பார்க்கும் வினாடி முட்கள் வேகமாக நகர்கிறது நமக்கு புலப்படாமல். இடையிடையே சொருகப்படும் பாடல்களும் அதன் வரிகளும் இந்த டாகுமெண்டரி க்காகவே எடுக்க பட்டது போல் ஒரு பிம்பம்.அமெரிகர்களிடத்தில் ஏற்படும் திருட்டு பயத்தால் வரும் தற்காப்பு துப்பாக்கி என விஷ பிரயோகத்தை 90s களில் சக்கை போடு போட்ட COPS என்ற டிவி தொடரை இதில் பிழிகிறார் மூர் . அந்த தொடரானது சில்லறை திருட்டில் ஈடுபடுவோரை காவலாளிகள் சென்று சிறைப்பிடிப்பது நேரலையாக (அ) படு சாமர்த்தியமாக எடிட் செய்து ஒளிபரப்ப படும் ஒரு மல்டி மில்லியன் டாலர் தொடர். அதன் இயக்குநரி பேட்டி எடுக்கிறார் மூர்.

அதில்
மூர் : "நீங்க எதனால இந்த தொடர எடுக்க முடிவெடுத்தீங்க ?"

தொடர் இயக்குனர் Jongley : "அது நாட்டு நடப்பில் நடக்குற வங்கி கொள்ளை மற்றும் வண்டி திருட்டு போன்ற சம்பவங்களை நேரடியாக மக்களிடம் கொண்டு செல்லும் ஐடியா அது"


மூர் : "இது மாதிரி பொது மக்கள் தேவ இல்லாம பயத்த உண்டு பண்றதுக்கு பதிலா , பெரிய பெரிய திருட்டு வேல பண்ற corporate ஊழல் முதலைகளை மடக்கி புடிக்கிற மாதிரி ஒரு டிவி தொடர நீங்க ட்ரை பண்ணலாமே ??"

தொடர் இயக்குனர்: "உங்களுக்கு தெரியாதா?? அது trp rating ல சோட போகாது மூர் "

மூர் : "அப்டி லாம் கெடயாது சார், நீங்களே நெனச்சு பாருங்க , நம்முடைய மேலதிகாரி , கருப்பு பணத்த பதுக்கி வைக்கும் போது , போலீஸ் அவர கையும் காலுமா புடிச்சி சும்மா தரதரன்னு இழுத்துகினு போனாங்க்னா ? .. மக்கள் அத செமயா ரசிப்பாங்க, போங்க சார் நீங்க சும்மா எங்கிட்ட ஒப்பேத்துறீங்க !!"

தொடர் இயக்குனர்: ?????!!!!!!


K Mart எனப்படும் ஒரு department ஸ்டோரில் Rifle குண்டுகள் எளிதாக கிடைப்பதை தடை செய்வதற்காக மைகேல் மூரும் , கொலம்பியா சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இரு சிறுவர்களும் எடுக்கும் நடவடிக்கைகளும் அதன் result களும் நாம் ரசிக்கும் வண்ணம் உண்மையிலே அமைந்தது அதிர்ஷ்டமே.

இந்த 2002 cannes world cinema festivall -ல் best doumentary film of the year என்ற award உம, César Award for Best Foreign Film என்ற விருதையும் அள்ளிய டாகுமெண்டரி படத்தை காண மறவாதீர் , இனிய மற்றும் புதிய அனுபவமாக அமைந்திடும் அதற்கு ஞான் கேரண்டி !! :)

தி பிரஸ்டீஜ்

ப்ளீஸ், நாலு வரி போடுப்பா, நாப்பது வரிகளெல்லாம் என்னால படிக்க முடியாதுனு சொல்றவங்க நல்லா கைய கால நீட்டி ஆசுவாசப்படுதிக்கிட்டு படிக்க ஆரம்பிங்க :)

சென்னைல மட்டும் தானோ என்னோவோ ஒரு ஆர்ப்பாட்டமே இல்லாம ரிலீஸ் ஆச்சு இந்த படம். எங்க அண்ணன் எப்டியோ தேடி கண்டுபிடிச்சி ஒரு புதன் கெழம நைட் ஷோ டிக்கெட் புக் பண்ணிட்டான், சீக்ரம் வந்துடுன்னு எனக்கு படம் பார்க்க வரச்சொல்லி ஒரு மெசேஜ். (குறிப்பு: அதேweekend ல படம் தியேட்டர விட்டு ஓடிபோச்சி.) .

"நட்பென்றால் அதில் ஆயிரம் இருக்குமப்பா ! , இன்னிக்கு அடிச்சிப்பாங்க நாளிக்கி நம்பலையே கலாசுவானுங்க ! " என்று மூன்றாம் மனுஷர்கள் விவரிக்கும் அளவுக்கு ஒரு நட்பு படம் என்று தியேட்டர் சீட்ல உட்காரும்போது நெனச்சது. எந்திரிக்கும் போது பல்பு.

FOLLOWING, MEMENTO(நம்ம முருகதாசு கஜினிக்காக "சுட்ட" வடை) , BATMAN BEGINS, INSOMNIA (Flubber புகழ் Robin Williams , இதுல வில்லன்) எடுத்த Christopher Nolan இன் ஐந்தாவது படம், THE PRESTIGE . படம் முடியும்போது கூட தெரியாது இந்த படத்துக்கு அவர்தான் டைரக்டர்நு (டைட்டில் கார்டு போடும்போது ஏதோ ஞாபகத்துல கவனிக்க மறந்துட்டுகிரன் ). தனது முதல் படமான FOLLOWINGஐ நாளைய இயக்குனர் budget -ல எடுத்து உலக திரைப்பட விழாவில் applause வாங்குனவரு.படம் முடிஞ்சி த்யேட்டர் விட்டு வெளிய வரும்போது வந்த முதல் எண்ணம் , "இந்த படத்த இப்படியா போட்டு சொதப்புவான் அந்த cristopher பயபுள்ள " என்று நானும் என் அண்ணனும் படத்தை வெகுவா வெறுத்தோம், மேலும் தல கால் புரியவில்லை (ஸ்க்ரீன்ல சப் டைட்டில் போடலபா)Christian Bale ( Terminator Salvation, Batman பட ஹீரோ) The Professor என்றழைக்கப்படும் ஒரு தெருவோர magician ஆகவும், Hugh Jackman (XMEN - Wolverine புகழ்) The Great Danton என்றழைக்கப்படும் All Show House Full Magician ஆகவும், Scarlett Johansson (அழகே புகழ்) The Great Danton இன் காதலி, எடுபிடி & அழகியாகவும், Michael Caine Magic Architect and Engineer ஆகவும், மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

தங்களது teenage பருவத்திலேர்ந்தே தோஸ்துங்கரெண்டு பேருக்குமே Borden - [Christian Bale ] & Angier -[ Hugh Jackman ] magic என்றால் உயிர் மூச்சு பேசு வாட்சு என எல்லாமே . ரெண்டு பேரும் மேஜிக்கில் உள்ள அனைத்து நுணுக்கங்களையும் கத்துகிட்டு ஊர்ல சீக்கிரம் பெரியாளகனும்னு ஒரு கனவு. இதனால் ஒத்த சிந்தனை உடையவர்களுக்குள் போட்டி, பொறாமை, வெறுப்பு , பகைமை, வஞ்சம், பழிக்கு பழி என்று எல்லையில்லா குரோதத்தில் முடிவு என 1940 களில் நடைபெறும் இரு மஜிசியன்களை (மந்திரவாதி) பற்றிய படம் .

படத்தில் ஹீரோ வில்லன் என்று ஒன்றும் கெடயாது, ரெண்டு பேருமே டகால்டி தான். படத்தின் முதல் காட்சியாக ஒரு புறாவை உதாரணமாக வைத்து MAGIC க்கான விளக்கம் கொடுக்கப்படுகிறது.

மறைப்பதற்கு முன் தன்னிடமுள்ள புறாவை காண்பிப்பது
THE PLEDGE.
அதை மறைய வைக்கும்போது
THE TURN.
அங்க முடிஞ்சிடாது இந்த MAGIC !
மறைச்சத திரும்ப கொண்டாரனும்கோவ் !!
அது தான்
THE PRESTIGE.

இதைத்தான் படத்தின் ஆரம்ப முனையிலே
EVERY MAGIC CONSIST of 3 PARTS OR ACTS
1. THE PLEDGE !
2. THE TURN !! and
3, THE PRESTIGE !!!

என்று அவசியமே படாத ஒரு குழந்தையிடம் (Professor மகள்) definition ஐ கொடுக்கிறார் Michael Caine (Jackman ன் support engineer )

கோர்ட் சீனில் தொடர்கிறது படம், Jackman ஐ திட்டமிட்டு கொன்றதற்காக சில மாத சிறை தண்டனையும் தூக்கு தண்டனையும் கிடைக்கப்பெருகிறான் Christian Bale . அவனது ஆறு வயது மகளும் கோர்ட்டில் நடப்பதை ஒன்றும் புரியாமல் அமைதியாக கவனிக்கிறாள். மாதமிருமுறை ஓர் உதவியாளரின் உதவியோடு தன தந்தையை பார்க்கிறாள் அனாதை சிறுமி . சிறையில் இனி இழப்பதற்கு வாழ்க்கை மட்டுமே உள்ளது எனும் விரக்திக்குள் தள்ளப்படுகிறான் Bale . வழக்கமாக நடப்பது போன்று தன் மகளிடம் சந்தித்து பேசி விடை பெரும்முன் அந்த குழந்தையை அழைத்து வந்த உதவியாளன், "இது உனது மன உளைச்சல் மிகுந்த இறுதி நாட்களை சற்று இளைப்பாற்றும்" என்று Jackman ன் பர்சனல் டைரியை கொடுக்கிறான். அதற்க்கு பண்ட மாற்றாக தனது(Bale) MAGIC சம்பத்தப்பட்ட டைரிஐ கேட்கிறான் அந்த உதவியாளன், அந்த MAGIC ஐ வைத்து கொஞ்சம் அதிகமாக காசு பாக்கலாம் என்பது அந்த உதவியாளனின் ஐடியா . ஆனால் தான் இறப்பதற்கு சில நாட்கள் முன்பு வரை காத்திருக்குமாறு கூறிவிட்டு அந்த dairyai வாங்கி கொள்கிறான்.

அவனது டைரியை படிக்க முற்படும்போது ஆரம்பிக்கிறது பிளாஷ்பாக்,

உண்மையான நட்பாக ஆரம்பித்த நாட்கள், ஒரு Magic ஷோவில் தன்னால்(Bale ஆல்) Jackman ன் மனைவி இறக்கும்போது, நட்பில் பிரிவினையை உண்டாகியது என்று டைரியில் மேற்கோள் காட்டியிருக்கிறான் இறந்து போன Jackman . அதில் ஆரம்பித்து தனது போட்டியாளரான Bale -ன் தெருவோர MAGIC -குகளை அவனையறியாமல் புகழ்ந்தும் பொறாமைப்படுவதுமாக இருக்கும் வார்த்தைகளை படித்து பெருமிதம் கொள்கிறான் Bale.

மேலும் , சரக்கு(magic) எதுவும் இல்லாமல் தன்னிடம் மிரட்டி வாங்கிய ரகசிய உத்திகள் ,அவனது எடுபிடியை தனது மாஸ்டர் பீஸ் magicஆன Transported Man (ஒரு கதவை திறந்து, கையில் இருக்கும் பந்தை உருட்டி , அந்த கதவுக்குள் மூடி ஒளிந்து , பல மீட்டர் தொலைவில் உள்ள வேறொரு மூடிய கதவை திறந்து அதே பந்தை தானே பிடிப்பது என்ற உத்தியை ) அறிவதற்கு தன்னிடம்(Bale ) வேவு பார்க்க அனுப்பியது, தன்னால் சந்தித்த மனக்கஷ்டங்கள், தன்னால் ஏற்பட்ட தூங்கா இரவுகள் என நீள்கிறது டைரியின் பக்கங்கள். இதையெல்லாம் ரசித்துகொண்டே படித்து முடிக்கும் தறுவாயில் பிளாஷ்பாக் முடிகிறது என்று நினைக்கும் போது ட்விஸ்ட் காத்திருக்கிறது அந்த dairyin இறுதி பக்க இறுதி வரிகளில் !.

" இதையெல்லாம் கம்பி எண்ணிக்கிட்டே ரசிச்சி படிக்கிற உனக்கு, வாழ கொடுப்பினை இல்லாம போச்சே " என்ற எவரும் அறியாத தனது தற்கால status மெசேஜை அப்பட்டமாக சொல்லும் வரியை கண்டு தூக்கி வாரி போடுகிறது அவனுக்கு.


யாரை கைமா பண்ணதுக்காக உள்ள வந்தோமோ , அவனே இப்ப நம்மள டைரி ல எழுதி கலய்க்கிரானே என்று உள்ளுக்குள் பொருமல் ஏகத்துக்கும். இருந்தும் எழுதியது இறந்தவன் கெடயாது என்று அசைக்க முடியாத நம்பிக்கை அவனுக்கு ஏன்னா, கொல நடந்தன்னிக்கி, தன்னோட THE TRANSPORTED MAN MAGIC குக்கு அடிச்சு போடும் படியா அவன் செஞ்சு காடிட்ட்ருக்குற THE REAL TRANSPORTED MAN -ஓட சூட்சுமத்த கண்டுபிடிக்க பின் stage கீழ போகும்போது, stage மேல தெறம காட்டிகினு இருந்தவன் போடக்குன்னு stage தரைய உடைச்சிகினு கீழ இருக்குற தண்ணி தொட்டிக்குள்ள விழுந்தான் ! அவன் தண்ணீல மூழ்கி மூச்சடைச்சி நிர்மூலமானது , கூட இருந்து காப்பாத்த முடியாம போனது தனக்கு மட்டும் தான் தெரியும். அதனால அந்த டைரிய குடுக்க வந்தது யாரு ?தூக்குல தொங்கறதுக்கு முன்னாடி அவன்கிடேர்ந்து தன்னோட பொண்ண எப்டி காப்பாத்துறது ? ஒரு வேல அவன் உயிரோட இருந்தான்னா எப்டி அவன பழிவாங்குறது என்ற பல கேள்விகளுக்கு அவன் மனத்தில்.

அதற்கு தீர்வு காண்கையில் மேலும் பல ட்விஸ்ட் களுடன் முடிகிறது படம். முதல் முறை இந்த தி prestige படத்தை காண்பவர்களுக்கு இந்த பதிவில் இருக்கும் மூணாம் பத்தி இறுதியில் சொன்ன தல கால் புரீல statementku அர்த்தம் புரிஞ்சிருக்கும் நினைக்கிறேன்.

தனது எதிரியின் MAGIC ஷோ வை மாறுவேடத்தில் சென்று குழப்பி அடித்து மொக்கயாக்கி, அதில் பங்கு பெறுபவர் ஒன்று கை அல்லது உயிர் போய்விடும் என்ற நிலையை உருவாக்குகின்றனர் இருவரும், ஆதலால் ஒவ்வொரு முறை MAGIC ஷோ முடியும் சீன் களை பார்க்கும் நமக்கு வயிற்றில் புளி கரைந்து பீதி பெருக்கெடுக்கும் என்பது சர்வ நிச்சயம்.

இந்த twistu எல்லாம் வெலன்கரத்துக்கு படத்த நாலு தடவ பார்க்க வேண்டியதா போச்சு .

ஒரு விடை தெரியா puzzle கு விடை கண்டுபிடிப்பது எனக்குள் எப்போதும் ஏற்படும் போராட்டம் (சினிமா puzzle மட்டும் தான் :)) அது மேலே சொன்னது போல் அலசி அலசி பார்த்து விடை கிடைத்த போது மனதினில் இனிப்பு.

படத்தின் பிளஸ்:
THE PRESTIGE இல் , சிறை நாட்கள் மற்றும் பிளாஷ் பக்குகளில் நான் லினியர் எடிட்டிங் , TRANSPORTED MAN சூட்சுமத்தை Tesla விடம் (கொஞ்சம் physics அல்லது electricity படிசிருந்தீங்கன்ன இவர தெரிய வாய்பிருக்கு) கற்கும்போது அவருக்கும் (Tesla) மென்லோ பார்க் விஞ்ஞானி எடிசனுக்கும் நிகழும் தள்ளு முள்ளை டச் பண்ணும் வரலாற்று கதையும், இருவரும் யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் அல்ல என்ற கதாபாத்திர மேருகேற்றலும் படத்தின் add -on features களாகும்.

படத்தின் மைனஸ்: குழப்பமான திரைக்கதை(repeated viewing கொடுக்கும், ஆதலால் அது பிளஸ்சே ) :)
fiction ending கொண்ட இறுதி கட்டம் , (டைரக்டர் பொறுப்பல்ல, இது ஒரு 1995 இல் வெளிவந்த ஒரு நாவலை தழுவியது)

ரொம்ப நாள் கழிச்சி இந்த படத்த திரும்பியும் போட்டு பாத்திங்கனா அதில் நிச்சயம் ஒரு அட! போடும் விஷயங்கள் இருக்கும்.
அப்புறம் ஒன்னு நிச்சயம் சொல்லணும், இத படிச்சதுக்கப்ரம் , "THE ILLUSIONIST படத்த பாருங்க அது இத விட நல்ல இருக்கும்" னு தயவு செஞ்சி யாரும் சொல்லாதீங்க அல்லது நெனைக்காதீங்க , இந்த மலை என்பது ஒரு மாஸ்டர் பீஸ் அதை ஒரு சீரியஸ் ஆன காமெடி பீஸ் உடன் கம்பெர் பண்ணீங்கன்னா உங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் !


படம் end கிரெடிட் போடும் முன்னர், ஆரம்ப முனையில் சொன்ன EVERY MAGIC CONSIST of 3 PARTS OR ACTS
1. THE PLEDGE !
2. THE TURN !! and
3, THE PRESTIGE !!!

இந்த definition ரிபீட்டு அடிக்கும்போது மேலே குறிப்பிட்டுள்ள ஒரு Magician ன் ஆற்றலை டைரக்டர் தன் படத்தில் உறுத்தல் இல்லாமல் புகுத்திருப்பது படைப்பாற்றலின் மைல் கல்.

முதல் முறை படத்தை காணும்போது ஒரு அறியா சிறுவன் போல படம் மொக்கை என்ற தவறான் எண்ணம் எனக்கு எழுந்தது போன்று உங்கள் அனுபவத்தை (முடிந்தால்) இங்கு பகிரவும். நன்றி. :)

பிக் பிஷ்

சிறுவயதில் இருளைக்கண்டு பயந்த போது, நம் அப்பா எதாவது குட்டி கதைகள் (அ) கிளைக்கதைகள் சொல்லி நம்மை தூங்க வைப்பதுண்டு. பாலக மனத்தில் பயம் நீங்கினாலும் , நம் அப்பா அதிலிருந்து நம்மை மீட்டு விடுவார் என்ற நம்பிக்கை உருவாகிறது.படிப்படியாக நாம் நம் அப்பாவின் நடவடிக்கையை கண்டு பெருமிதம் கொள்வோம், ரசிகன் ஆவோம்.நமது அடுத்தடுத்த செய்கைகளில் நமது inspiration ஆக அவர் இருந்திடுவார். 

காலப்போக்கில் நம்மை நாமே அறிந்து கொள்ளும் தருணம் வரும் வயதில், அவர் மீது ஈர்ப்பு குறையும், மாறும் , மழுங்கும் (அ) இல்லாமல் போய் விடும். ஈர்ப்பு கூடும் என்பது அரிதே.

இது பெரும்பாலானோர் வாழ்க்கையிலும் ஒரு அத்யாயமே. அப்பா மகன் உறவை மையப்படுத்தி தமிழ் சினிமாவில் சமீபமாக(2005 பிறகு) வந்த படங்கள் அதிகம். (தவமாய் தவமிருந்து, எம் மகன், சந்தோஷ் சுப்ரமணியம், வாரணம் ஆயிரம் மேலும் சில). ஒவ்வொரு படமும் ஒரே மையக்கரு இருந்தாலும் கதை அமைப்பில் சற்று வித்த்யாசம் தென்படும். [நமக்கு வாரணம் ஆயிரம் படம் தவிர மத்தது எல்லாமே பிடித்தம் தான்].

இவ்வகை படங்கள் உங்களுக்கு பிடிக்குமென்றால் நீங்கள் Big Fish படத்தை ரசிக்கலாம்.தனது திருமண விழாஇறுதியில், தனது சிறு வயதில் சொன்ன தற்பெருமை கதைகளை , அப்பா(Edward Bloom) எல்லாரிடமும் வயது வரம்பு பார்க்காமல் அனைவரிடமும் பகிர்கின்றார். கேட்பவர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் கேட்பதால், இம்மாதிரியான கதைகள் சொல்வது அவருக்கு மிகவும் பிடித்தம். ஆனால் மகனுக்கோ(Will Bloom) இதை மீண்டும் மீண்டும் கற்பனை செய்து பழக்கப்பட்டதால் மிகவும் மொக்கையாக இருப்பதென்று உள்ளுக்குள் ஒரு புழுக்கம். அதனால் மோதிரம் மாத்திய கையோடு அந்த Marriage Hall ஐ விட்டு வெளியே வந்துவிடுகிறான்.

தனிக்குடித்தனம் செல்லும் முன்னர் தனது மொக்கையான அனுபவத்தை தன் அப்பாவிடம் எடுத்து கூறுகின்றான்.
"இனிமேல் இது மாறி ப்ளேடு போடாதீங்கப்பா தாங்க முடீல" என்று அழுத்தம் திருத்தமாக சொல்கிறான்.
அப்பாவும் "உனக்கு தர்ம சங்கடமாக இருக்கிறது என்றால் இத்தோடு நான் நிறுத்திக்கிறேன்" என்கிறார்.
"அப்பா ! எனக்கு மட்டும் தர்ம சங்கடம் கெடயாது அது உங்களுக்கும் தான், உங்க கதைல பாதி உண்மை கெடயாது, சும்மா அது செஞ்சன் இது செஞ்சன் சொல்றீங்க, எத்தன பேரு இத அமைதியா கேட்பாங்க ? இது ஏன் உங்களுக்கு புரிய மட்டேன்குதுனு தெர்ல " என்று கூறி வெறுப்புடன் பிரிந்து செல்கிறான்.

பின்னர் கதை தடம் மாற்றம் (தடுமாற்றம் அல்ல !) அப்பாவின் இளம் வயது பயணங்களை , வீர தீர சாகசங்களை ஒரே சீராக ப்ளாஷ்பக் காட்சிகள். அதில் அவர் தனது ஊரிலேயே(Ashton) மிகப்பெரிய சீக்காளி, இந்த ஊர் ஒரு சிறிய pond என்றும் தான் ஒரு பெரிய Fish என்று நம்பிக்கை கொள்கிறார். அந்த ஊரை விட்டு செல்கிறார், வேறோரு ஊர் போகும் வழியில் யாரும் உபயோகம் செய்யாத பாதையை அவர் தேர்ந்தெடுக்கிறார். அது ஒரு பசுமையான நகரத்திற்கு(Spectre) வழி கொண்டுள்ளது. அங்கு சில காலம் கழித்து அந்த ஊரும் ஒரு சிறிய pond என்று நினைக்கிறார். பின்னர் அங்கிருந்தும் விடை பெறுகிறார். பின்னர் வேறொரு ஊர் சென்று அங்கிருக்கும் circus இல் ஒரு அழகியை காண்கிறார், அவரை மணக்கிறார். பின்னர் ஒரு வெளியூரில் தங்கி அங்கு வேலையில் சேர்கிறார், தனது உழைப்பால் நிறைய காசு பார்க்கிறார். மீண்டும் சொந்த ஊர் திரும்பும் போது தான் அந்த பசுமை நகரம் Spectre சின்னாபின்னமாகி கிடப்பதை கண்டு அதிர்ர்ச்சி ஆகிறார். கையில் வைத்த பணமும் நண்பரிடம் கடன் வாங்கியும் அந்த ஊரை புனர் நிர்மாணம் செய்து அந்த நகரத்தை விட்டு தன் மனைவியை காண வீட்டுக்கு செல்கிறார்.

கதை மீண்டும் அதே தடத்தில், சில ஆண்டுகள் கழித்து, அம்மாவிடமிருந்து மகனுக்கு(Will Bloom) ஒரு phone செய்கிறாள், அப்பாவிற்கு உடல் நலம் குன்றுகிறது என்று கூறுகிறாள். மகன் அவசரம் அவசரமாக புறப்பட தயாராகின்றான், தானும் வருவதாக அவனது நிறை மாத கர்ப்பிணி மனைவி(Marion Cotillard) சொல்கிறாள். இருவரும் மூட்டை முடிச்சு கட்டுகின்றனர்.

உடல் நலம் விசாரிக்கும் நேரத்தில் மருமகளிடத்தில் தனது மொக்கையை continue செய்கிறார் மாமனார். மகன் காண்டாகிறான்(மறுபடியும்). வீட்டில் உள்ள பழைய சாமான்களை ஒழிக்க உதவுமாறு மகனிடம் கேட்கிறார் தாய். அம்மாவின் வேண்டுகோளிக்கிணங்க மகன் பழைய சாமான்களை ஒழிக்கும் நேரத்தில் தன் அப்பா புருடா விட்ட கதைகளுக்கு சான்றுகள் தற்செயலாக கிடைக்கின்றன. இவை கூட தன் அப்பாவின் புருடா சான்றாக இருக்கும் என்ற சந்தேகத்தை தீர்க்க, தன் தந்தையால் புனர் நிர்மாணம் செய்ய பட்ட நகரத்தை நோக்கி கிளம்புகிறான் மகன்.

அங்கு அவன் தந்தை அவனது சிறு வயதில் கூறிய அனைத்து தற்பெருமை கதைகளும் உண்மையா இல்லையா என கண்டுபிடித்து அப்பாவிடம் அவன் எப்படி நடந்து கொள்கிறான் என்பது மீதி கதை.


படத்தில் நாம நோட் பண்ணவேண்டியது நிறைய. இது ஒரு சாதாரண அப்பா மகன் செண்டிமெண்ட் படமப்பா என்றும் சொன்னாலும், அந்த பிளாஷ்பாக் காட்சிகள் ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் career குறித்து முடிவு செய்ய வேண்டிய பாடம்.
திரைக்கதையும் சும்மா கெடையாது (நான் படத்தோட அருமை தெரியாமல் ரெண்டு தடவ தூங்கி படத்த பாதியிலே நிப்பாட்டிட்டன், அலுவல் அயர்ச்சிப்பா :)). கதை இரண்டு தடமாக பிரிந்தாலும், அவை ஒன்னு சேர வேண்டிய இடத்தில் ஒரு seamless fit .

படத்த முழுசா பாத்துட்டு கமெண்ட்ஸ் குடுங்க !, தினமும் அதற்காக காத்திருப்பேன் :)

காப்லேன்ட்பாஸ் ? உங்களுக்கு போலீஸ் படம் புடிக்கும்களா?
அப்ப இத்த படிக்கறது ?


Rocky, Rambo போன்ற action படையல்களில் நடித்த Sylvester Stallone ,
ஒரு போலீஸ் படம் try பண்ணுவோமே என்று விரும்பி ஏற்ற கதாபாத்திரம் Sheriff Freddy , படம் COPLAND .

கடமை கண்ணாயிரம் policea Don புகழ் Robert De Niro,நாட்டாம Policea - Harvey Kietel (John Travoltaவின் நிஜ நண்பர் ), கேடி policea Ray Liotta (நெறைய Don படத்துல De Niro frienda நட்சிருப்பாப்ல ) என நட்சத்திர பட்டாளம் ஏராளம் .

நாம பாக்காத போலீசு படமா ? என படம் பார்க்க உட்கார்ந்தால், ஒரு அப்ராணி போலீஸ் கேரக்டர்இல் நம்ம bodybuilder !இதுல ஒரு காது அவுட்டு வேற.

போக போக ஒரு இயல்பான கதை ஓட்டம் . New Jersey மாகானத்துல நம்ம புரட்சிதலைவி அம்மா மனம் கொண்ட Mayor ஒருத்தர், ஒரு பெரிய காலி ஊரா பாத்து Policeku நெலம் ஒதுக்குறார் . ஒரு ஊருன்னாலே அங்க ஒரு incharge sheriff இருக்கனும்ல , அதே போல , police குடும்பம் சகிதமா இருக்கும் ஊர்ல நம்ம ஹீரோ Freddy(Stallone) தான் sheriffu.

அந்த ஊர்க்காரரான நாட்டாம police அவரது சகாக்களும் பண்ற அநியாயத்த கண்டும் காணாம , பார்கிங் பைன் , theft casenu பொட்டி கேஸ் புடிக்க்ரதுல நம்ம Freddy(Stallone)பிஸியோ பிஸி ! கேடி Police பெருச்சாளிகள் ஹீரோவை கண்டுக்க மாட்டானுங்க ஹீரோவும் அப்டிதான் .. இப்டியே போனா யார் தான் வந்து தட்டி கேக்குறது ?? பல நாள் கேடி police ஒரு நாள் அகப்படுவான் , அகப்பட்டான் அந்த நாட்டாம போலீஸ் , ஒரு சிறிய துப்பாக்கி சூடு சம்பவத்தில் !

ஒரு நடுநிசி நேரத்தில் , இனவெறியும் கர்வமும் மிகுந்த நாட்டாமை Police அவரது மாமன் மகனுடன் (அவரும் police but சின்ன police) சகிதம் , உல்லாச பயணம் மேற்கொண்ட ஒரு afro american கும்பலை (நிராயுதபாணிகளை), காரணமின்றி கண்மூடி தனமாக சுட்டு பொசுக்குகிறது . அவசரகதியில் செய்த காரியம் சமயோசிதமாக ஜோடனை செய்யப்படுகிறது . தனது மாமா பையனை ஆற்றில் குதிக்க செய்து , துப்பாக்கிகள் அந்த கறுப்பினத்தவர் பிணங்களின் கையில் வைக்கப்படுகிறது . குடிபோதயில் Car ஓட்டிய கும்பலை தட்டி கேட்ட police மீது துப்பாக்கி சூடு , ஒரு police உட்பட ஐந்து பேர் சாவு என்று மறுநாள் பத்த்ரிக்கையில் மலைப்பு செய்தி !

போலீஸ் மேலிடத்தில் இந்த நாட்டாம போலீஸ் மேல ரொம்ப நாளா டவுட்டு , அதனால ஒரு துடிப்பு போலிச்காரான நம்ம Rober de Niro வர்றார் .
பல investigations பண்ணியும் ஒரு துப்பும் கெடைக்கல , அதனால நம்ம அப்ராணி ஹீரோ கிட்ட help கேக்குறார் அவர் , அப்புறம் ஹீரோ help பண்ணாரா இல்லியான்றதுதான் மீதி கத .

கிளைமக்ஸ்ல நாட்டமைய போட்டு தள்ளும்போது ஹீரோகிட்ட ஒரு டயலாக் விடுவாரு , அப்ப நம்ம ஹீரோ பதிலுக்கு "I CANT HEAR YOU, RAY" நு சொல்லும்போது US தியேட்டர்ல (1997 அன்னிக்கு) விசில் பறந்துருக்கும் நினைக்கிறன், டைம் கெடச்சா இந்த படத்த மிஸ் பண்ணாதீங்க ! :)